வேதாகமத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட பல பெண்களுண்டு. பெயர் கூறப்படாத ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த பெண்கள் பலருண்டு. எப்பொழுதாகிலும் நீங்கள் அவர்களைக் குறித்துச் சிந்தித்ததுண்டா? சிலர் ஊரின் பெயரால் அறியப்பட்டுள்ளனர். சிலர் இன்னாரின் மனைவி எனக் குறிப்பிடப் பட்டுள்ளனர். சிலர் அவர்களுடைய செய்கையினால் பேசப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு சிலரை நாம் இத்தொடர் மூலம் சந்திக்கலாம். இதை நமக்கு வழங்குபவர் திருமதி பிரியா சுந்தரராஜன் அவர்கள்.
- சூனேமியாள்
முதலாவதாக நாம் சந்திக்க இருக்கும் பெண்மணி 2இராஜாக்கள் 4 ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள சூனேமியாள். இவரிருந்த ஊர் நமக்குத் தெரியும். ஆனால் இவர் பெயர் தெரியவில்லை. இவர் மூலமாய் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய
பாடங்கள் பல. விருந்தோம்புதலை நன்கு அறிந்திருந்த பெண்ணாக இவரைப் பார்க்கின்றோம் (2இராஜாக்கள் 4:8). அவர் தெய்வ பக்தி நிறைந்தவராக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் தன் வீட்டிற்கு வந்தவர் தேவனுடைய மனுஷர்,
பரிசுத்தவான் என்பதை உடனே கண்டு கொள்ள முடிந்தது (2இராஜாக்கள் 4:9). அறிவில் சிறந்தவராக இருந்ததினால் விருந்தினரின் தேவையை உணரமுடிந்தது (2இராஜாக்கள் 4:10).‘கனம்பொருந்திய ஸ்திரீ’ (வசனம் 8) என்ற சொற்கள்
அவரின் சம்பத்து மற்றும் சமுதாயத்தில் அவருக்கிருந்த மரியாதையைக் கூறுகிறது.
எல்லாம் இருந்த இந்த நற்குணசாஹ்ல்க்கு மனதிருப்தியும் (1தீமோத்தேயு 6:1þ10) உடன்பிறந்த குணமாக இருந்தது. ஒவ்வொரு பெண்ணுக்கும் இது மிகவும் அவசியம். நம்மில் பலர் இருக்கின்ற நன்மைகளை மறந்து, இல்லாத ஒன்றைக் குறித்து
ஏங்குகிறோம். முறுமுறுத்து, கவலைப்பட்டு சமாதானத்தைத் தொலைத்துவிட்டுத் தவிக்கின்றோம். இல்லாத ஒன்றிற்காக ஏங்கி, இருக்கின்ற நன்மைகளை அனுபவிக்கமுடியாமல் அல்லாடுகின்றோம். தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு நன்றிகூற
மறந்து விடுகின்றோம். பக்கத்து வீட்டில் ஒரு பொருளை வாங்கிவிட்டால், நமக்குத் தேவையோ இல்லையோ, நாமும் வாங்க வேண்டும். போட்டியும், பொறாமையும் நமக்கு மனவேதனையை மட்டுமே தரும். சூனேம் ஊரைச் சேர்ந்த
இப்பெண்ணுக்குக் குழந்தை இல்லை. இது ஒரு பெரிய குறை. இவர் இதைக்குறித்து முறுமுறுத்து மறுகியிருந்தால் இன்று இவர் நமக்கு மாதிரியாக இருந்திருப்பாரா. தனக்குக் கிடைத்த ஆசீர்வாதங்களுக்காக நன்றியுள்ளவராக இருந்ததினால்
தேவன் அவரை ஆசீர்வாதத்தின் வாய்க்காலாகப் பயன்படுத்தினார். தேவன் நமக்குக் கொடுத்துள்ள நல்ல ஈவுகளுக்காக அவரைத் துதிக்கப் பழகுவோம்.
இரக்கமும், கரிசனையும் கொண்டவராக இவரைப் பார்க்கின்றோம். ஒரு நல்ல குடும்பப் பெண்ணுக்கு மிகவும் தேவையான குணங்கள் இவை. தேவனை அதிகமாக நேசிக்கும் இருதயத்தி ருந்து இரக்கமும், கரிசனையும் பெருக்கெடுத்து ஓடும். தேவ அன்பினால் நிறையப்பெற்ற ஒரு பெண்ணால் மட்டுமே தேவ ஊழியரையும், ஊழியங்களையும் நேசிக்க முடியும். பரிசுத்தாவியானவரால் ஆட்கொள்ளப்பட்ட பெண் இரக்கம் மிகுந்த வளாகவும், தேவையிலுள்ளோருக்கு உதவும் மனப்பாங்கும் நிறைந்தவராக இருப்பார். சூனேம் ஊரைச் சேர்ந்த இப்பெண்மணி இத்தகைய குணம் நிறைந்தவராக இருந்தார். இந்த குணமே தேவ ஊழியரின் தேவையை அறிந்து அவருக்கு உதவ முடிந்தது. இருதயத்தில் தேவ அன்பு இல்லாவிடில் அது நம் முகத்திலும், செய்கையிலும்
வெளிப்பட்டுவிடும். மிகவும் வருந்தி அழைக்கப்பட்டபின்பு, எஹ்ல்சா தீர்க்கதரிசி இவருடைய வீட்டுக்குச் சென்று உணவருந்தினார் என்று 2 இராஜாக்கள் 8 ஆம் அதிகாரம் 4ஆம் வசனத்தின் முதல் பகுதியில் பார்க்கின்றோம்.
ஒருமுறை இப்பெண்மணியின் விருந்தோம்பலைக் கண்டபின்பு, எஹ்ல்சா தீர்க்கதரிசி இவ்வூர் வழியாகச் செல்லும்போதெல்லாம் அவர் வீட்டில் உணவருந்திச் சென்றதாக இவ்வசனத்தின் பிற்பகுதியில் பார்க்கின்றோம். நம்முடைய உபசரிப்பு எப்படிப் பட்டது? ஒருமுறை நம் இல்லத்திற்கு வரும் ஊழியர் மறுபடியும் வர விரும்புவாரா? ஊழியருக்கு உணவளித்தோடு நின்றுவிடாமல், அவருடைய தேவை என்ன என்று அறிந்து தன் கணவரின் உதவியோடு அதையும் நிறைவேற்றுவதை நாம் வசனம் 10 இல் பார்க்கின்றோம். எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், மிகுந்த கரிசனையோடு ஊழியரை உபசரித்தார். தேவ ஊழியத்தில் பெண்களின் பங்கு அதிகம். இந்தப் பெண்ணின் கரிசனையும், உபசரிப்பும் எஹ்ல்சாவின் ஊழியத்திற்கு பெரிய உதவியாக இருந்தது. நம் இரட்சகர் இவ்வுலகில் இருந்த காலத்தில் அவர் பின் அவருக்கு உதவியாக இருந்த பெண்கள் பலரை நாம் சுவிசேஷங்களில் (லூக்கா 8:2,3) காணலாம். பவுலடியாரின் ஊழியங்களில் அவருக்கு உதவின பெண்களைக் குறித்து அவர் எழுதிய நிருபங்களில் நாம் காணலாம் (ரோமர் 16:1,2,6,12,13). தேவனின் மகத்தான ஊழியத்தில் நம் பங்களிப்பு என்ன? சிந்தித்துப் பார்ப்போமாக. நம் தேவன் யாருக்கும் கடனாளியல்ல.
(மத்தேயு 10:42). மலடி என சமுதாயத்தின் கேஹ்ல்க்கும் அவமானங்களுக்கும் ஆளான சூனேம் ஊரைச் சேர்ந்த இப்பெண்மணியின் குறையை தேவன் தீர்த்தார். ஊழியர் சொன்னபடியே ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தார். நாம் நினைப்பது நடக்காவிட்டால், கேட்பது கிடைக்காவிட்டால் எளிதில் சோர்ந்து விடுகின்றோம்.. சூனேம் ஊரைச் சேர்ந்த இந்தப் பெண் சோர்ந்து போகாமல் ஜெபத்தில் விடாப்பிடியாகச் சாதிக்கக்கூடியவராக இருக்கின்றார். சோர்ந்து போகாமல் ஜெபிக்கவேண்டும். ஜெபத்திற்குப் பதில் கிடைக்கும்வரை ஜெபிக்கவேண்டும். இதைத்தான் நம் ஆண்டவரும் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றார் (லூக்கா 18:1). அற்புதமாகக் கிடைக்கப்பெற்ற ஒரே அருமை மகன் இறந்துவிட்டான். இந்தப் பெண் கலங்கவில்லை, கதறவில்லை. ஆனால் யாரிடம் தன் கவலையைத் தெரிவிக்கவேண்டுமோ, அவரிடம் சென்றாள். ஞானத்தோடு பேசினார். எஹ்ல்சாதான் வரவேண்டும். அவர் தடியல்ல என்பதில் உறுதியாக நின்றார் (வசனங்கள் 19þ37). நாம் வாழ்வில் பிரச்சனைகளைச் சந்திக்கும்போது அவற்றை எவ்வாறு எதிர்கொள்கின்றோம்? கலங்கித் தவிக்கின்றோமா þ மனிதர்களிடம் சொல்ஹ்ல் அதற்குத் தீர்வு காண முயலுகின்றோமா ஜெபித்து பதில் கிடைக்குமுன்,
பொறுமையிழந்து முறுமுறுக்கின்றவர்களாக இருக்கின்றோமா. கிடைத்தது போதுமென்று இருக்கின்றோமா அல்லது நாம் விரும்புவது கிடைக்கு மட்டும் போராடுகின்றோமா. ஜெபவாழ்வில் சோர்ந்து போகாமல் விடாப்பிடியாக ஜெபிக்க நாம் கற்றுக் கொள்ளவேண்டும். கர்த்தர்தாமே நாம் ஒவ்வொருவரும் மேற்கண்ட பெண்மணியைப் போன்று விருந்தோம்பஹ்ல்ல் மிகச் சிறந்தவர்களாக, போதுமென்ற மனதுடன்கூடிய தெய்வ பக்தியுடன், இரக்கமும், கரிசனையும் கொண்டு ஊழியரை உபசரிக்கின்றவர்களாக, சோர்ந்து போகாமல் ஜெபிக்கக்கூடிய பெண்களாக இருக்க உதவி செய்வாராக.